Skip to main content

Posts

Showing posts from 2023

சுகப்பிரசவம் நடக்க வழிகள்

 சுகப்பிரசவம் நடக்க வழிகள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும் இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்கிறது. தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும் உடற்பயிற்சி செய்தவர்கள் தினமும் படிகட்டிகளில் அரை மணி நேரம் ஏறி இறக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும் இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடன் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப்பிரசவம் எளிதாக இருக்கும்.

உணவு சாப்பிடும் முறை

 உணவு சாப்பிடும் முறை சாப்பிடும் பொழுது வீட்டின் கதவு மூடி தான் இருக்க வேண்டும். வாசலுக்கு நேரே திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்து சாப்பிட கூடாது. வெளியில் இருந்தாலும் செருப்பு அணிந்து கொண்டு சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிட கூடாது. அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.  சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும்.  அவசர அவசரமாக சாப்பிடாமல் ஒவ்யொரு பருக்கைகளையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள்.

  தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக்கூடாத பொருட்கள். தாய் வீட்டில் பயன்படுத்திய விளக்கு, பூஜை அறையிலோ அல்லது வரவேற்பரையிலோ பயன் படுத்திய எந்த விளக்காக இருந்தாலும் அதை புகுந்த வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. விளக்கானது வீடு முழுவதும் வெளிச்சத்தை கொடுத்து நேர் வினைகளை ஏற்படுத்தியிருக்கும். அதை புகுந்த வீட்டிற்கு கொண்டு வந்தால் பிறந்த வீட்டில் இருள் சூழும் என்பது நம்பிக்கை,

மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்ன?

 மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்ன? காலை உணவை தவிர்த்தல் அளவுக்கு மீறி சாப்பிடுதல் நிறைய இனிப்பு சாப்பிடுதல் புகை பிடித்தல் மாசு மிக்க காற்றை சுவாசித்தல் முகத்தை மூடி தூங்குதல் தூக்கமின்மை  சிந்தனையின்றி இருத்தல் யாருடனும் பேசாமல் இருத்தல் நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுத்தல் இவற்றை தவிர்த்தால் உற்சாகம் உங்களை ஒட்டிக்கொள்ளும்

வீட்டில் லட்சுமி குடியேற....

வீட்டில் லட்சுமி குடியேற.... நீண்ட நேரம் தூங்க     சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. இடது கையால் பணத்தை      வாங்கவோ தரவோ கூடாது. இரவு நேரத்தில் துணிகளை துவைத்தல் கூடாது. பிறர் வாழ்வதை கண்டு பொறாமை      படுதல் கூடாது.

இதெல்லாம் செய்யக்கூடாது!

 இதெல்லாம் செய்யக்கூடாது! தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும். ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட, கூடாது. வீட்டின் வாசலில் அல்லது நிலைகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.

பெண்ணுக்கு அழகு

 பெண்ணுக்கு அழகு 1. பெண்ணின் குதிங்கால் பளபளப்பாகவும் சதைப் பற்றுள்ளதாகவும் மென்மையானதாகவும் சமதளம் உள்ளதாகவும் ரோஜா நிறத்திலும் இருந்தால் அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வாள் 2. பெண்ணின் குதிங்கால் சொரசொரப்பாகவும் வெளுத்து போயும் காய்ந்து போயும் வெடிப்புகள் உடையதாகவும் இருந்தால் அவளுக்கு மகிழ்ச்சி குறைவுதான். 3. பெண்ணின் தொப்புள் ஆழமானதாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால் அதிர்ஷ்டம். தொப்புளின் கீழே ஒரு மச்சம் இருந்தால் அது பெண்ணுக்கு உயர்வு.

முதுகு வலிக்கு தீர்வு

முதுகு வலிக்கு தீர்வு நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும். கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்துகொள்வது நல்லது. உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும். இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது. கயிற்றுக்கட்டிலில் படுத்து முதுகில் வலி உள்ளவர்கள் உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்தான் படுக்க வேண்டும்; ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக்கூடாது.

வளையோசைக்கு கொட்டும் செல்வம்

வளையோசைக்கு கொட்டும் செல்வம் எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் வளையல் அணிந்து இருப்பார்கள். வளையல் அணியாத பெண்களிடம் காசு, பணம் அவ்வளவு சீக்கிரம் தங்குவது இல்லையாம். எனவே தான் கண்ணாடி வளையல்களின் சத்தம் கேட்குமாறு பெண்கள் முந்தைய காலங்களில் நிறையவே வளையல் அணிந்து வந்தனர். இந்த வளையல் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் அங்கு சுபிட்சம் நிலைத்திருக்கும் என்கிறது சாஸ்திரங்கள். குறிப்பாக வளையல் அணியாமல் பூஜை அறையில் பெண்கள் விளக்கு ஏற்றவே கூடாது.

கருத்தரிக்க சரியான வயது !

கருத்தரிக்க சரியான வயது ! பெண்கள் தாய்மை அடைவதற்கான சரியான வயது இருபதிலிருந்து முப்பது வயது வரை தான்.ஏனெனில் பெண்ணின் பல உறுப்புகளை விட இனப்பெருக்க உறுப்புகள் தான் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறது. முப்பது வயதிற்கு மேல் கருவுறும் தன்மை குறைய தொடங்குகிறது.நாற்பது வயதிற்கு மேல் மாதவிடாய் நிற்கும் தன்மை உண்டாகிறது. இருப்பினும் ஒரு சில பெண்கள் நாற்பது வயதிற்கு மேலேயும் கருத்தரிக்கின்றனர்.

தினமும் கடைப்பிடிக்க வேண்டியவை

தினமும் கடைப்பிடிக்க வேண்டியவை 1. இரவில் 10மணிக்கு தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும். 2. காலை இரவு இரண்டு முறை குளிக்க வேண்டும் பல் தேய்க்க வேண்டும்.  3. தூங்கும் போது மொபைல் தலை பக்கத்தில் வைத்துக் தூங்க கூடாது.  4.தினமும் ஒரு வேளையாவது சத்தான ஆகாரம் எடுக்க வேண்டும். 5. தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.  6.தினமும் எதாவது ஒரு பழம் காய்கறி ஆவது சாப்பிட வேண்டும்.  7.அதிக நேரம் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

நோய் இல்லாத வாழ்க்கைக்கு

நோய் இல்லாத வாழ்க்கைக்கு தினமும் காலையில் எழுந்த உடன், சுடுநீர் அருந்துங்கள். மலம் கழிக்காமல், காலை உணவை சாப்பிட வேண்டாம். தினமும் மூன்று நெல்லிக்காய், ஜூஸ் அடித்து குடிக்கவும். இரவு அதிகம் சாப்பிடாமல், பழங்கள் அதிகம் சாப்பிடவும். தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி.. கொஞ்சம் சாப்பிடுங்கள்.நோய்கள் உங்களை அண்டாது.

சனிக்கிழமைகளில் செய்யக் கூடாதவை....

சனிக்கிழமைகளில் செய்யக் கூடாதவை.... சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்காதீர்கள். அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம்.

குழந்தைக்கு திருஷ்டி போக !

குழந்தைக்கு திருஷ்டி போக ! பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும்செய்யக்கூடிய ஒன்று. நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். சாப்பிடாம அடம் பிடிக்கிறதுக்கு கண்திருஷ் கூட காரணமா இருக்கும்னு சொல்லுவாங்க! ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு தாய் மடியில குழந்தையை இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுவாங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.

பெண் என்பவள் யார் தெரியுமா?

 பெண் என்பவள் யார் தெரியுமா? கண்ணீர் துடைப்பதும் பெண்..  கண்ணீர் விடுவதும் பெண்..  கண் இமை போல் காப்பதும் பெண்.. கண்மணியே என்று கொஞ்சுவது பெண்..  கனிவோடு உபசரிப்பதும் பெண்..  கண்மூடித்தனமாய் நம்புவதும் பெண்..  கணக்கு போட்டு வாழ்பவளும் பெண்..  சாதிக்க துடிப்பவளும் சாதனை படைப்பவளும் பெண்..

அழுவது போல கனவு

அழுவது போல கனவு ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து. தொல்லை ஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை அதிகமாக டீ காபி அருந்தக் கூடாது.  அதிக மசாலா எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும் குளிர்பானங்கள் அதிகம் குடிப்பதைத் தவிர்க்கவும். அசைவ உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது.முக்கியமாக பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

மனைவிகள் கணவர்களிடம் எதிர்பார்ப்பவை

01. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.  02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03.கோபப்படக்கூடாது.  04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது.  06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக கொடுக்க கூடாது.  07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போத வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்

தேவையற்ற செருப்பு

தேவையற்ற செருப்பு முதலாவதாக நாம் பார்க்க கூடிய தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய முக்கியமான பொருள் தேவையற்ற செருப்புகள் ஆகும். இந்த செருப்புகள் நாம் வெளியில் செல்லும் போது, பல கெட்ட விஷயங்களை மிதித்து நடந்து கொண்டிருக்கும். எனவே, செருப்புகள் எப்போதும் வீட்டிற்குள் வைக்க கூடாது. அதேபோன்று, இந்த செருப்புகள் தேவையில்லாமல் பயன்படாத நிலையில் நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது.

கல்யாணம் ஆனவுடன் செய்யக்கூடாத விஷயம் என்ன?

 கல்யாணம் ஆனவுடன் செய்யக்கூடாத விஷயம் என்ன? திருமணத்திற்கு பின் ஆணோ பெண்ணோ இன்னொரு உறவை ஏற்படுத்தி கொள்ள கூடாது இது மிகவும் பாவமான செயல். பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து கொடுங்கள் எக்காரணம் கொண்டு துணைக்கு துரோகம் செய்யாதீர்கள். குடும்பம் என்று ஆனவுடன் நான் எனக்கு எனது என்பதை விடுத்து நாம் நமக்கு என்று மாறுங்கள் கணவன் மனைவி இருவரும் சின்ன சின்ன தியாகங்கள் செய்ய வேண்டியது வரும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் அப்பொழுது தான் காதல் ஊற்றெடுக்கும். பொதுவாகவே நம் மனது சிறு சிறு விஷயங்களுக்கு தான் அதிகமாக நொந்து கொள்ளும். அதனால் சிறு சிறு ஆசைகளை இருவரும் இருவருக்கும் நிறைவேற்றுங்கள்

தம்பதிகள் படுக்கை அறையில் செய்ய வேண்டியது இதுதான் !

 தம்பதிகள் படுக்கை அறையில் செய்ய வேண்டியது இதுதான் ! பகல் முழுக்க அலுவலக பணி செய்யும் தம்பதிகள் இரவு நேரங்களில் படுக்கையறையில் அமர்ந்து மனம் திறந்து பேச வேண்டும். இதனால் இவர்கள் இருவர் இடையே பிணைப்பு வலுப்பெறும். ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதால் மற்றவர்களின் தேவையை அறிந்து செயல்பட முடியும். மேலும் ஆக்சிடாசின் என்னும் ஹார்மோன் சுரந்து மன அழுத்தமும் குறையும். முக்கியமாக அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை படுக்கை அறையில் பேசவே கூடாது.

யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்!

 யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்! மாலை நேரத்தில் யாரும் பணம் கேட்டு     வந்தால் கொடுக்க வேண்டாம். அந்தி சாயும் மாலைப்பொழுதில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. இதனால் வீட்டில் இருக்கும் லட்சுமி      சென்றுவிடலாம். அதனால் விளக்கேற்றிய பிறகு யாருக்கும் பணம் தர வேண்டாம். இருப்பினும் மாலை நேரத்தில் யாரேனும் விபத்து போன்ற அவசர நிலையில்கேட்டால் பணம் கொடுக்கலாம்.  இதற்கு பணம் கொடுப்பதால் மனிதநேயம் வளரும்.

வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள்

 வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி      எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும்      அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!

இது தான் உண்மை

  1) மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பின் உணரலாம். 2) மகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம். 3) கணவனின் மாற்றத்தை மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம். 4) மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம். 5) நண்பனின் மாற்றத்தை கஷ்ட காலத்தில் உணரலாம். 6) சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம். 7) சகோதரியின் மாற்றத்தை சொத்துட பரிமாற்றத்தில் உணரலாம். 8) பிள்ளைகளின் மாற்றத்தை முதுமையில் உணரலாம்.

இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம்???

தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தேங்காயை சூறை விடும் போது சுக்கு நூறாக உடைந்தால் நம் சங்கடங்கள் சிதறிப்போகும். தேங்காய் உடைக்கும் போது பூ வந்தால் லாபம், பணவரவு, நம் குடும்பத்திற்கு நல்லது, என்று நாம் இதை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல் தேங்காய் அழுகி இருந்தாலும், நம்மைப் பிடித்த கெட்டது இதோடு விட்டு விட்டது. என்று நினைத்து மன அமைதி கொள்ள வேண்டும்.

சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீர்கள் !

 ஈரத்துணியுடனும்,துண்டுடனும் சாப்பிடக்கூடாது, தெருக்கதவைச் சாத்தாமலும்,சந்திரனின் நிழலிலும்,கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும் நடுநிசியிலும், பிரதோஷகாலத்திலும்,இருட்டிலும் திறந்த மாடியிலும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், பௌர்ணமியன்று நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடாமல் பலருடன் கூடிச்சாப்பிடலாம்

யாரிடம் பணம் தங்காது

ஒரு பொருளின் தேவையில்லாத போதும், அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களிடம். கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்பவர்களிடம். தன்னை கட்டுப்படுத்தும் திறமையில்லாதவர்களிடம். போதும் என்ற மனம் இல்லாதவர்களிடம். அடுத்தவர்களை போல வாழ      நினைப்பவர்களிடம். யோசித்து முடிவு எடுக்காதவர்களிடம். அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு எளிதில்ம யங்குபவர்களிடம். எது தேவை, எது தேவையில்லை என்று முன்னதாகவே கணக்கிட தெரியாதவர்களிடம். சிக்கனம், சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம். பணத்தை எப்படி பெருக்குவது என்ற அறிவில்லாவர்களிடம். பணத்தின் மதிப்பை அறியாதவர்களிடம்.

முருகனுக்கு ஆலோசனை வழங்கிய குருபகவான்

 திருச்செந்தூர் கோவிலின் மூலஸ்தான மூர்த்தியான ஸ்ரீபாலசுப்பிரமணியருடன் சேர்ந்தே குருபகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இங்கே குருபகவான் யந்திர ரூபமாகவும், காயத்ரீ மந்திர ரூபமாகவும், நித்யவாஸம் செய்து ஸ்ரீபாலசுப்பிரமணியரை வந்து தரிசிப்போரின் கஷ்டங்களை நீக்கி குரு அருள் புரிவார். திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தபோது அவருக்கு அருகில் இருந்து ஆலோசனைகள் வழங்கி முருனை வெற்றி வேலனாக்கியவர் குருபகவான்...!!அதனால்தான் திருச்செந்தூர் முதன்மை குரு ஸ்தலமாக அறியப்படுகிறது.

தேய்ந்து போன துடைப்பம்

 துடைப்பத்தை எப்பொழுதும் மகாலட்சுமிக்கு இணையாக கூறப்படுவது வழக்கம். அத்தகைய துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானம் தேயும் என்கிற ஒரு சாஸ்திரமும் உண்டு. எனவே, வாஸ்து ரீதியாகவும் தேய்ந்த மற்றும் பயன்படாத துடைப்பங்களை வீட்டில் சேர்க்கக்கூடாது. அவற்றை அப்படியே மூலையிலும், பரண் மேலும் போட்டு வைப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும். மேலும், வீட்டில் பல்வேறு பிரச்சனைகள், பண பிரச்சனை ஏற்படும்.

இதெல்லாம் செய்யாதீங்க

விளக்கு வைத்த பிறகு தலை வாருதல், முகம் கழுவுதல், பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. பெண்கள் கண்ணீர்விடும் வீட்டில் செல்வம் தங்காது. பெண்கள் தலையை விரித்துப்      போட்டிருப்பதும், இரு கைகளாலும்             தலையை சொறிவதும் வறுமையை      உண்டாக்கும். உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு      உடனே எண்ணெய் தேய்த்து நீராடக்           கூடாது.

உடை அணியும் முறை

1. முடிந்தவரை தளர்வான பருத்தி ஆடை அணியவும்.  2. சிந்தடிக் ஆடையை தவிர்க்கவும். 3.உள்ளாடைகள் மற்றும் காலுறையை தினமும் மாற்ற வேண்டும்.  4. வேறு ஒருவருடைய துண்டையோ அல்லது கைக்குட்டையையே பயன்படுத்த கூடாது. 5.உங்கள்ஆனந்தத்துக்காகவும், சுகத்திற்காகவும் உடை அணிந்தாலும் அதை சுத்தமாக உடுத்தவும்.

சொந்த வீடு கட்ட

 கிரகப்பிரவேசம் செய்யும்போது, அந்த வீடுகளில் செங்கலை அடுக்கி வைத்து கணபதி ஹோமத்தை செய்வார்கள், கணபதி ஹோமம் முடிந்த பிறகு, அந்த செங்கலில் இருந்து ஒரு செங்கலை மட்டும் உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் விநாயகரிடம், உங்கள் குலதெய்வத்திடம் வைத்து பூஜை செய்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

சாப்பிட்டவுடன் சுடு தண்ணீர் குடிக்கலாமா?

 சுடுதண்ணீர் பொதுவாகவே செரிமான சக்தியைத் தூண்டுகிறது. அதுவும் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான காய்ச்சிய நீரை பருகினால் செரிமானம் எளிதில் நடைபெறும். இதனால் நெஞ்செரிச்சல் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் இருக்காது. உணவை சாப்பிட்ட பிறகு அவற்றை எளிதில் கரைக்க சுடு தண்ணீர் குடிக்கலாம்.

நிலை வாசலில் வைக்க வேண்டியபொருள்கள்

 ஒரு வீடு நிறைவான சந்தோஷத்தை பெற வேண்டுமென்றால், அதற்கு கிரக லட்சுமியின் ஆசிர்வாதம் ரொம்ப ரொம்ப அவசியம் தேவை. பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் கிரகலட்சுமி திரு உருவப்படம் இருக்காது. ஆனால் எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய சுவாமி படங்களின் வரிசையில் இந்த கிரக லட்சுமியின் திருவுருவப்படமும் ஒன்று.

பிரம்ம முகூர்த்தம் சிறப்புகள்

பிரம்ம முகூர்த்ததின் உச்ச நேரம் அதிகாலை 3.20-4.20 மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உங்களுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

ஆன்மீக ரகசியம்

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் உங்களுக்கும் உங்களது வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.

பூஜை செய்யும் போது

பூஜை செய்யும் பொழுது தரையில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது. ஏதாவது மனை அல்லது வெள்ளை துணி மஞ்சள் துணியில் அமர்ந்துதான் பூஜை செய்ய வேண்டும். சுவாமி படத்திற்கு மேல் இருக்கும் பூக்கள் வாடும் வரை வைத்திருக்க கூடாது. ஊதுபத்தி ஏற்றும் பொழுது இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் ஊதுபத்தி ஏற்ற வேண்டும்.

பெண்கள் செய்யவேண்டியவை.

வீட்டில் இருக்கும் போது பெண்கள் தங்கள் கூந்தலை மேலாக அள்ளி முடிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் கூந்தல் கொட்டுவது நின்றுவிடும் முடி அடர்த்தியாக வளரும். பெண்கள் கால்களை அருகருகே வைத்து நடப்பது தான் அழகாக இருக்கும் இதைதான் பழங்காலத்தில் அண்ணநடை என்றார்கள். கால்களை அகற்றி போட்டு ஆண்களைப் போல் நடந்தால் பெண்மையின் நளினமே இருக்காது.

எந்த சமயத்தில் வீட்டில் பூஜை செய்தல் கூடாது

எந்த சமயத்தில் வீட்டில் பூஜை செய்தல் கூடாது.... குழந்தை பிறந்த வீட்டில் குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்கு பூஜை செய்தல் கூடாது. வீட்டில் பெண் மாதவிடாய்' நாட்களில் பூஜை செய்ய வேண்டாம்.. பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம்.

தாய்ப்பால் சுரப்பு குறையக் காரணம்

கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடாத பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு பால் சுரப்பு குறையும். புரோலக்டின் என்கிற ஹார்மோன் அளவு குறைந்தாலும் பால் சுரப்பு குறையும். சில பெண்களுக்குப் பரம்பரையாகவே தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.

வீட்டில் கண்டிப்பாக இருக்க கூடாத பொருட்கள்:

கத்தரிக்கோல், அருவா, கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வைக்கக்கூடாது. இவை அனைத்தும் மனகஷ்டதை உண்டாக்கும். நெருப்பு பட்ட நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு போன்றவற்றை வைக்க கூடாது, இவற்றால் பீரோவில் பணம் தாங்காது.

செய்யக் கூடாதவை

 செய்யக் கூடாதவை :- • பகலில் தூங்குவதையும், உடலுறவு கொள்வதையும் தவிர்க்க வேண்டும். • காலை இளம் வெயிலில் வெளியே அலையக் கூடாது. • கரும்பு போன்று இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடன் உறவு கொள்ளக் கூடாது. • இனிய வாசம் தரும் தலைமுடியை கொண்ட விலைமாதர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

Popular posts from this blog

வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள்

 வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி      எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும்      அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!

இதெல்லாம் செய்யக்கூடாது!

 இதெல்லாம் செய்யக்கூடாது! தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது, தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும். ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட, கூடாது. வீட்டின் வாசலில் அல்லது நிலைகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது.

ஆன்மீக ரகசியம்

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் உங்களுக்கும் உங்களது வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.