கல்யாணம் ஆனவுடன் செய்யக்கூடாத விஷயம் என்ன?
திருமணத்திற்கு பின் ஆணோ பெண்ணோ இன்னொரு உறவை ஏற்படுத்தி கொள்ள கூடாது இது மிகவும் பாவமான செயல். பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து கொடுங்கள் எக்காரணம் கொண்டு துணைக்கு துரோகம் செய்யாதீர்கள்.
குடும்பம் என்று ஆனவுடன் நான் எனக்கு எனது என்பதை விடுத்து நாம் நமக்கு என்று மாறுங்கள்
கணவன் மனைவி இருவரும் சின்ன சின்ன தியாகங்கள் செய்ய வேண்டியது வரும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் அப்பொழுது தான் காதல் ஊற்றெடுக்கும்.
பொதுவாகவே நம் மனது சிறு சிறு விஷயங்களுக்கு தான் அதிகமாக நொந்து கொள்ளும். அதனால் சிறு சிறு ஆசைகளை இருவரும் இருவருக்கும் நிறைவேற்றுங்கள்
Comments
Post a Comment