- ஈரத்துணியுடனும்,துண்டுடனும் சாப்பிடக்கூடாது, தெருக்கதவைச் சாத்தாமலும்,சந்திரனின் நிழலிலும்,கொள்ளிக்கட்டையின் வெளிச்சத்திலும் நடுநிசியிலும், பிரதோஷகாலத்திலும்,இருட்டிலும் திறந்த மாடியிலும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், பௌர்ணமியன்று நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடாமல் பலருடன் கூடிச்சாப்பிடலாம்
வாழ்க்கைக்கு நிம்மதி தரும் மந்திரங்கள் உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போது தவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்!
Comments
Post a Comment